12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயதான பாதிரியார்., பொங்கியெழுந்த பொதுமக்கள்
63 வயது பாதிரியார் 12 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கானா நாட்டில் மிகவும் பிரபலமான பாதரியாரான Nuumo Borketey Laweh Tsuru XXXIII-வின் பாரம்பரிய திருமணத்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அது பின்னடைவையும் விமர்சனத்தையும் தூண்டியது.
விழாவில் கலந்து கொண்ட பெண்கள், 12 வயது சிறுமிக்கு சில அறிவுரைகளை வழங்கினர்.
சிறுமி தனது கணவருக்காக கவர்ச்சிகரமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், மனைவியாக இருக்க தயாராக இருக்க வேண்டும் என்றும், கணவரிடம் தனது பாலியல் ஈர்ப்பை அதிகரிக்க வாசனை திரவியங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பாதிரியாரை விசாரிக்க வேண்டும் என்று பலர் கூறியுள்ளனர்.
கானா சட்டம் வழக்கமான திருமணங்களை அங்கீகரிக்கும், ஆனால் அதே வேளையில், கலாச்சார நடைமுறை என கூறி நடத்தப்படும் குழந்தை திருமணங்களை தடை செய்கிறது. கானாவில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
கானாவில் குழந்தை திருமண விகிதம் குறைந்து வருகிறது, ஆனால் இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது என்று பிபிசி தெரிவித்துள்ளது.
கானாவில் 19% பெண்கள் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள், 5% பேர் தங்கள் 15வது பிறந்தநாளுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த சர்ச்சைக்குரிய திருமணம் குறித்து அரசு அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை.