இளவரசி கேட் ஹரியிடம் ஆசைப்பட்டு கேட்ட விடயம்., சம்மதிக்க மறுத்த மேகன்
புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும் இளவரசி கேட் மிடில்டன், ஹரி-மேகன் தம்பதியிடம் ஒரு விடயத்தை ஆசைப்பட்டு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளவரசர் ஹரியும் மேகனும் பிரித்தானிய அரச குடும்பத்துடன் ஒரு இறுக்கமான உறவைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் தற்போது இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தம்பதியிடமிருந்து பிரிந்துள்ளனர்.
இருப்பினும், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தம்பதி இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுடனான தங்கள் பகையை முடிவுக்கு கொண்டு வர, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், வில்லியம் மற்றும் கேட் தம்பதி ஹரி மற்றும் மேகனை அணுகியதாகவும், அவர்களின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் ஆகியோரை இங்கிலாந்துக்கு அழைத்து வருமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு மேகன் மார்க்கல் சம்மதிக்க மறுத்துவிட்டதாக நம்பப்படுகிறது.
இதனை அரசக் குடும்ப எழுத்தாளர் Tom Quinn மிரர் பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார்.