மனநலம் பாதிக்கப்பட்டவர் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை
மூதூர்(Mutur) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிஹிரியா நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் பெஹிரியா நகர் பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
உயிரிழந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், கைகளில் மணல் மூட்டையும் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி இரவு யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் ஏதோ மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.