;
Athirady Tamil News

யாழில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடைக்கால தமிழ்கல்வெட்டு

0

வன்னியில் தொல்லியற் திணைக்கள ஆய்வின் போது பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டியில் வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில் தொல்லியல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் திரு. கபிலன், திரு. மணிமாறன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வரும் தொல்லியல் ஆய்வின் போது வன்னியில் மரையடித்த குளத்திற்கு அருகே பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு அப்பிரதேச மக்களால் அங்குள்ள வயல்வெளியில் இருந்து எடுத்துவரப்பட்டு அங்குள்ள வைரவர் ஆலயத்தில் தெய்வச்சிலைகளை வைப்பதற்கான பீடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அக்கல்லில் உள்ள எழுத்துக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த வவுனியா பிரதேசசபை ஆய்வு உத்தியோகத்தர் திரு. ஜெயதீபன் இது பற்றிய செய்தியை திரு. மணிமாறனுக்கு தெரியப்படுத்தியதன் பேரில் இக்கல்வெட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

பல வரிகளில் எழுதப்பட்டிருந்த இக்கல்வெட்டின் உடைந்த கீழ்ப்பாகமே தற்போது கிடைத்துள்ளது.

அதில் ஐந்து வரிகள் காணப்படுகின்றன. அதன் முதலாவது வரியில் உள்ள எழுத்துக்கள் பல பெருமளவு சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. அதனால் அவ்வரியில் சொல்லப்பட்ட பெயர்களை அல்லது செய்திகளை அறியமுடியவில்லை. ஏனைய நான்கு வரிகளையும் தெளிவாக வாசிக்க முடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.