சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்
சர்வதேச ரீதியில் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
உலகில் பெண்கள் தனியாக சுற்றுலாப் பயணம் செய்யக்கூடிய சிறந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணம்
உலகின் முதனிலை சுற்றுலா சஞ்சிகைகளில் ஒன்றான டைம் அவுட் சஞ்சிகையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தனியாக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதில் நாட்டம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்கள் தனியாக சுற்றுலாச் செல்லக்கூடிய மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் இரண்டாம் இடத்தை போர்துகல் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜப்பானுக்கு ஐந்தாம் இடம்
இந்த வரிசையில் மூன்றாம் இடத்தை ஸெஸ்ச்சியா பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தை ஜப்பானும், ஐந்தாம் இடத்தை குவாத்தமாலாவும் பெற்றுக்கொண்டுள்ளன.