சட்டவிரோத மணலுடன் 4 வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் பறிமுதல் – சாரதிகளும் கைது
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4 வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ , கோவிலாக்கண்டி பகுதிகளில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்றையும் அதன் சாரதியையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அத்துடன் உரிய அனுமதிப் பத்திரம் இன்றியும், அனுமதிப் பத்திரத்தில் மோசடி மேற்கொண்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.