;
Athirady Tamil News

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ 22 கோடியை பரிசாக அள்ளிய நபர்: அவரது நீண்ட நாள் கனவு

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் Big Ticket லொட்டரியில் இந்தியர் ஒருவர் 10 மில்லியன் திர்ஹாம் பரிசாக வென்றுள்ளார்.

Big Ticket லொட்டரி
கத்தார் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ரமேஷ் கண்ணன் என்பவரே Big Ticket லொட்டரியில் பரிசை அள்ளியவர். மார்ச் 29ம் திகதி இணையமூடாக 3 லொட்டரி சீட்டுகளை தமது நண்பர்கள் 10 பேர்களுடன் இணைந்து ரமேஷ் கண்ணன் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், இலக்கம் 056845 என்ற சீட்டுக்கு பரிசு கிடைத்துள்ளது. நேரலையின் போது ரமேஷ் கண்ணனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியாமல் போயுள்ளது. ஆனால் அதன் பின்னர் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட, மிகுந்த உற்சாகத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும், தமது நண்பர்களுடன் இணைந்து லொட்டரி வாங்கி வந்துள்ளதாகவும், கடந்த மாதம் ஒரே ஒரு தவறான இலக்கத்தால் பரிசு பறிபோனதாகவும், ஆனால் வெற்றி மிக அருகில் இருப்பதாக தமக்கு நம்பிக்கை இருந்தது என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புனித மாதத்தில் தமக்கும் நண்பர்களுக்கும் மிகப்பெரிய பரிசு, (இந்திய பண மதிப்பில் ரூ 22 கோடி) கிடைத்துள்ளது ஒரு ஆசீர்வாதமாகவே கருதுவதாகவும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாள் கனவு
லொட்டரியில் முதல் முறை வெற்றியை ருசிக்கும் ரமேஷ், தமக்கு கிடைக்கும் பங்கில், குடும்பத்தினருக்காக குடியிருப்பு ஒன்றை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாடகை குடியிருப்பில் தமது குடும்பம் வாழ்வதகாவும், அவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு என்பதே தமது நீண்ட நாள் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Big Ticket லொட்டரியானது தங்கள் செயல்பாட்டினை தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக நிர்வாகத்தின் புதிய விதிகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் டிக்கெட் விற்பனை முடக்கப்பட்டுள்ளது. ஆனால் மிக விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்றே நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.