ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணையை சோதனையிட்ட வடகொரியா
ஒலியை விட வேகமாக செல்லும், திட எரிபொருள் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனையிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வழக்கமாக திரவ ஹைட்ரஜன் மற்றும் ஒட்சிசன் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், அலுமினியம் மற்றும் அமோனியம் பெர்குலோரேட் கலவையை எரிபொருளாக பயன்படுத்தும் இந்த ஏவுகணை, குறைந்த நேரத்தில் அதி வேகத்தை எட்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவற்றை கண்டறிவதும் கடினம் என கூறப்படுகிறது.
ஏவுகணை சோதனைக்கு கண்டனம்
இதேவேளை வடகொரியா, கடலில் ஏவுகணை சோதனை நடத்தியதாகக் கூறி ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி இந்த திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் எங்களிடம் சிறந்த ஏவுகணை தொழில்நுட்பம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.