;
Athirady Tamil News

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை உயிருடன் மீட்பு!

0

புதிய இணைப்பு
500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 14 மாத குழந்தை சாத்விக்கின் அசைவுகளை ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை விட்டு மீட்பு பணியினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று (04) காலை முதல் மீட்புப்பணியை தீவிரப்படுத்திய மீட்பு குழுவினர் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் நேற்று முதல் தொடர்ந்து பணியாற்றி குழந்தையை உயிருடன் மீட்ட குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்த 14 மாத சாத்விக் என்ற குழந்தை மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று முன் தினம் (03) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், சதீஷ் முஜகொண்டா (30) இவரது மனைவி பூஜா (26) இவர்களுடைய 14 மாத ஆண் குழந்தையான சாத்விக் என்பவரே இவ்வாறு ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

ஆழ்துளை கிணறு
அதாவது குறித்த பெற்றோரிற்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் எலுமிச்சை பயிரிட்டிருந்த நிலையில் தற்போது மழையில்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்தையடுத்து சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா என்பவர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார்.

இவ்வாறு 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்காமையால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்ட நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

மீட்பு குழுவினர்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கிய நிலையில் குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஒட்சிசன் செல்ல ஏற்பாடு செய்ததுடன் மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் கமராக்களை(Camera) உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

மீட்பு பணி
இரவானதால் மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்ததுடன் கர்நாடக மாநிலம் பெல்காம், கலபுரக்கி மற்றும் ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

அவர்கள் ஆழ்துளை கிணற்றை ஒட்டி இணையாக ஜே.சி.பி மூலம் குழி தோண்டி குழந்தை இருக்கும் இடத்தை நெருங்குவதுடன் தொடர்ந்து மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பூபாலன், காவல்துறை சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவன் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று (04) காலை நிலவரப்படி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் கை மற்றும் கால்கள் அசைவதை கமரா மூலம் மீட்பு குழுவினர் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.