சீன எல்லையில் திடீரென தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படை ஹெலிகொப்டர்
இந்திய விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்று சர்சைக்குரிய சீன எல்லையான லடாக்கில் திடீரென தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீரென ஹெலிகொப்டர் தரையிறக்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ரக ஹெலிகொப்டர்களில் விமானப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு ஹெலிகொப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
ஹெலிகொப்டரில் தொழில்நுட்ப கோளாறு
இதுதொடர்பாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. இதையடுத்து ஹெலிகொப்டரை லடாக்கில் அவசரமாக தரையிறக்கினர்.
அதில் பயணித்த 2 விமான ஓட்டிகளுக்கும்எந்த பாதிப்பும் இல்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விமானப்படை அதிகாரிகள், ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.