இஸ்ரேல் பிரதமருக்கு ரிஷி சுனக் எச்சரிக்கை
பாலஸ்தீன காசா பகுதிக்கான நிவாரண உதவிகளை தடுத்தால், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக அறிவிக்கவேண்டியேற்படும் என்று இங்கிலாந்தின் பிரதமர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் பிரதமர் நெத்தன்யாகுடன் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போதே இங்கிலாந்தின் பிரதமர் ரிசி சுனக் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதில் மாற்றங்களை செய்யாவிட்டால், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாக தமது நாடு அறிவிக்க வேண்டியேற்படும் சுனக் எச்சரித்ததாக சர்வேத ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நெத்தன்யாகு அளித்துள்ள உறுதி
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட மனிதாபினமானப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஏழு உதவிப் பணியாளர்களில் மூன்று இங்கிலாந்து நாட்டவர்களும் அடங்கியிருந்தமையை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காசா பகுதிக்கு அதிகளவு நிவாரணப்பொருட்களை அனுப்புவதற்கு வழியேற்படுத்தப்படும் என்று நெத்தன்யாகு உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில் காசாவில் மனித அவல நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்துமாறு அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் உள்ளூர் அமைப்புக்கள் தத்தமது அரசாங்கங்களிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.