;
Athirady Tamil News

யாழில். நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இரவு தூங்கியவர் மறுநாள் காலை 07 மணியாகியும் தூக்கத்தால் எழும்பாததால் , வீட்டார் அவரை தொட்டு எழுப்ப முயன்ற போது , அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.