புதிய இந்தியத் துணைத் தூதுவரை சந்தித்த சிறீதரன்
இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை (Sai Murali) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) அண்மையில், சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது, யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) இந்தியத் துணைத் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, ஈழத்தமிழர்களது அரசியல் நலன்சார் விடயங்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் உள்ளிட்ட பலநிலைப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
புதிய இந்தியத் துணைத் தூதுவர்
யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்தியத் துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி கடந்த மாதம் கடமைகளை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.