;
Athirady Tamil News

கோடை விடுமுறையில் ஏற்பட்ட மாற்றம் – கல்வித்துறை முக்கியத் தகவல்

0

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட கோடை விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

கோடை விடுமுறை
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவு பெற்று, தற்போது 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு வருகிற 8 ஆம் திகதி தேர்வுகள் நிறைவு பெறுகிறது.

1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பருவத்தேர்வுகள் முடிவடைந்து, நாளை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகை காரணமாக 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பரீட்சை ஏப்ரல் 22, 23 திகதிகளுக்கு மாற்றப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 6 முதல் 21 ஆம் திகதி வரையில் தேர்வுகள் இல்லை. எனவே கோடை விடுமுறை இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கோடை விடுமுறையில் ஏற்பட்ட மாற்றம்
இது குறித்து தெளிவான விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகளை முன்னிட்டு ஏப்ரல் 6ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

பின் ஏப்ரல் 22, 23 ஆகிய திகதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும்.

அடுத்த நாளான ஏப்ரல் 24 ஆம் திகதியில் இருந்து மீண்டும் கோடை விடுமுறை ஆரம்பமாகும். பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை அதாவது அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு அவசியம் வருகை தர வேண்டும்.

அந்நேரத்தில் மாணவர் சேர்க்கை, விடைத் தாள் மதிப்பீடு மற்றும் பிற அலுவல் பணிகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.