நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (04) பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று (05) பிற்பகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விளக்கமறியல் உத்தரவு
தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.