;
Athirady Tamil News

ஓய்வு பெற்றவர்களுக்காக தனிக் கிராமம்! எங்குள்ளது தெரியுமா….

0

பிரிட்டனில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நபர்கள் அவர்களுக்கென ஒரு தனித்துவமான கிராமத்தை அமைத்து அதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

பிரிட்டனின் கேனாக் மில் என்ற கிராமத்தில் உள்ள கட்டிடக் கலைஞர் ஆன் தோர்ன் என்பவர் தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து 2.5 ஏக்கர் பரப்பளவில் இந்த சுற்றுச்சூழல் கிராமத்தை வடிவமைத்துள்ளார்.

”லண்டன் வாழ்க்கை முறையால் சோர்வடைந்துவிட்டதாகவும், ஓய்வுக்குப் பிறகு, அவர் அமைதியை விரும்பியதனால் அனைவருக்கும் நிம்மதியாக ஒன்றாக வாழக்கூடிய இடத்தை உருவாக்க வேண்டும் என விரும்பியதாக” ஆன் தோர்ன் கூறினார்.

13 ஆண்டுகள் தேவைப்பட்டது

2006ஆம் ஆண்டு இதைப் பற்றி சிந்தித்த ஆன் தோர்ன், இந்தக் கிராமத்தை நிறுவுவதற்கு 13 ஆண்டுகள் ஆனதாக கார்டியன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை 1.2 மில்லியன் டொலர்களுக்கு வாங்கினர். அப்போது 8 குடும்பங்கள் மட்டுமே இருந்ததால், தங்கள் ஓய்வூதியம் முழுவதையும் இதற்காக செலவழித்து வந்தனர்.

இப்போது இது ஒரு முழு கிராமமாக உள்ளது, அங்கு பலர் தங்கள் முழு குடும்பத்துடன் வாழ்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து உணவு சமைப்பார்கள். எல்லோரும் ஒன்றாக புதிய திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் ஒருவருக்கொருவர் எந்த பணமும் வாங்காமல் கற்பிக்கிறார்கள்.

இங்குள்ள மக்களின் தொழில்
வாரத்தில் நான்கு நாட்கள் முழு கிராமமும் ஒன்றாக பங்கேற்று பேசி, உண்டு மகிழ்கிறார்கள். ஒன்றாக உணவை சமைக்கின்றனர். எல்லோரும் ஒன்றாக நடனமாடுகிறார்கள், பாடல்கள் கேட்கிறார்கள்.

தேனி வளர்ப்பதும், மண்பாண்டம் தயாரிப்பதும் இங்குள்ள மக்களின் தொழிலாகும். ஒவ்வொரு நாளும் அதில் புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். இங்கு குடியேறிய ஒவ்வொரு வீடும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. தேவைப்படும்போது ஒருவருக்கொருவர் துணை நிற்கின்றனர்.

கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அவர்கள் இந்த கிராமத்தில் குடியேறினர். வெளி உலகில் எல்லோரும் தனித்தனியாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இங்கே அனைவரும் ஒன்றாக வாழ்ந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.