அதிகரித்து வரும் சுவிஸ் மக்கள் தொகை: கட்டுப்படுத்த அரசியல் கட்சி கூறும் சர்ச்சைக்குரிய திட்டம்
சுவிட்சர்லாந்தில் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது அரசியல் கட்சி ஒன்று.
அதிகரித்துவரும் சுவிஸ் மக்கள்தொகை
சுவிஸ் மக்கள்தொகை, 2050ஆம் ஆண்டுக்கு முன் 10 மில்லியனைத் தாண்டிவிடாதவகையில் அதைக் கட்டுப்படுத்துமாறு சுவிஸ் அரசியல் கட்சி ஒன்று அரசைக் கோரியுள்ளது.
அதற்கு ஆதரவாக அக்கட்சி முன்வைத்துள்ள பிரேரணை ஒன்றில் இதுவரை 115,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அரசியல் கட்சி கூறும் சர்ச்சைக்குரிய திட்டம்
சமீப காலமாக சில நாடுகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது என்ன சொல்வது என்று புரியவில்லை. கனடா போன்ற சில நாடுகள், சில ஆண்டுகளுக்கு முன்வரை, தங்கள் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிப்பதற்காக புலம்பெயர்ந்தோரை வரவேற்றன.
இப்போது, மக்கள்தொகை அதிகமாகிவிட்டது, புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தவேண்டும் என்கின்றன.
அவ்வகையில், சுவிட்சர்லாந்தின் சுவிஸ் மக்கள் கட்சியும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த, சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றைத் தெரிவித்துள்ளது.
அதாவது, சுவிட்சர்லாந்தின் தற்போதைய மக்கள்தொகை, 9 மில்லியன். 2040 வாக்கில் அது 10 மில்லியனாக உயரலாம் என பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆகவே, மக்கள்தொகை 9.5 மில்லியனை எட்டும் முன் நடவடிக்கைகளைத் துவங்கவேண்டும் என்று கூறியுள்ள சுவிஸ் மக்கள் கட்சி, புலம்பெயர்தல் கொள்கைகளை மாற்றுவதன் மூலமும், சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களின் குடும்பத்தினர் சுவிட்சர்லாந்துக்கு வருவதை குறைப்பதன் மூலமும், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ஆலோசனை கூறியுள்ளது.