யாழில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் பலி! இளைஞன் கைது
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார்.
நேற்று முன்தினம் கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த ஒருவர் புதிய செம்மணி வீதி ஊடக கடக்க முற்பட்ட நிலையில் சைக்கிளில் வந்த நபருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இளைஞன் கைது
இவ் விபத்தில் சைக்கிள் பயணித்த நல்லூரை சேர்ந்த க.மோகனகுமார் (வயது 61) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று உயிரிழந்துள்ளர்.
சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளினை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 21 வயது இளைஞன் காவல்துறையினரால் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக கோப்பாய் காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.