ஒட்டுமொத்த இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்த 14 வயது சிறுமி
இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
இலங்கையில் தற்போது நடைபெற்றும் மகளிர் முக்கோண கிரிக்கெட் போட்டியில் காணப்பட்ட சிறப்பு சம்பவங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறன.
இந்தப் போட்டியில் 14 வயதான சாமுதி பிரபோதா என்ற சிறுமி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சாமுதி பிரபோதா
சாமுதி பிரபோதா மொனராகலை மாவட்டத்தில் உள்ள கும்புக்கன கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் தற்போது இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளராகும்.
14 வயதில் தேசிய மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமை சிறப்பம்சமாகும். அது மட்டுமன்றி மொனராகலை போன்ற கடினமான பிரதேசத்திலிருந்து தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.
அவரது பகுதியில் தேசிய அளவில் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இதுவரையில் எவரும் உருவாக்க முடியவில்லை. ஆனால் இம்முறை 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான வீராங்கனைகள் இது போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து வந்த மிகவும் திறமையான வீராங்கனைகள் என தெரியவந்துள்ளது.
பின்தங்கிய கிராம சிறுமிகள்
கஷ்டப்பகுதி கிராமங்களை சேர்ந்த சிறுமிகள் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், உலகின் தலைசிறந்த பெண்கள் அணிகளான இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இளம் பெண்கள் அணிகளை இலங்கைக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தப்பட்டு வருகின்றது.
மகளிர் கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.