ரஷ்ய நகரம் ஒன்றில் அவசர நிலை பிறப்பிப்பு: புற்றுநோய் அபாய கதிரியக்கக் கசிவால் நடவடிக்கை
ரஷ்ய நகரமொன்றில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய கதிரியக்கக் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கதிரியக்கக் கசிவு கண்டுபிடிப்பு
தென்கிழக்கு ரஷ்யாவில், அமூர் நதியை ஒட்டி அமைந்துள்ள Khabarovsk நகரில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய கதிரியக்கக் கசிவை வெளியிடும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக, அந்தப் பொருள் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான container ஒன்றிற்குள் வைக்கப்பட்டு, கதிரியக்கக் கழிவுகள் பாதுகாக்கப்படும் அமைப்பு ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அவசர நிலை அறிவிப்பு
அந்த கதிரியக்கக் கசிவை வெளியிடும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, Khabarovsk நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம், இன்னமும் மூன்று நாட்களுக்கு அவசர நிலை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.