சிதையும் 900 கி.மீ பிரான்ஸ் கடற்கரைகள்! காணாமல் போகும் நூற்றுக்கணக்கான வீடுகள்
கடற்கரை அரிப்பு காரணமாக பிரான்ஸில் நூற்றுக்கணக்கான வீடுகள் வசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது.
கடற்கரை அரிப்பு
பிரான்ஸ் நாட்டின் கடற்கரை கிராமங்கள் கடற்கரை அரிப்பு என்ற பெரும் ஆபத்தால் சூழப்பட்டுள்ளன. அதாவது உயரும் கடல் மட்டமும் சக்தி வாய்ந்த அலைகளும் கடற்கரையை அரித்து வருகின்றன.
இதனால், பிரான்ஸில் நூற்றுக்கணக்கான வீடுகள் 2028க்குள் வசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது என்றும், இந்த அபாயம் அடுத்த சில பத்தாண்டுகளில் மேலும் தீவிரமடையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் எதிர்காலம் கேள்விக்குறி
பிரான்ஸ் அரசு இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், அடுத்த 4 ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வசிக்கத் தகுதியற்றவை ஆகிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டிற்குள் லட்சக்கணக்கான வீடுகளாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான அமைச்சர் கிறிஸ்டோஃபே பெச்சு (Christophe Béchu) இந்த பிரச்சனையின் அவசரத் தன்மையை வலியுறுத்தினார்.
பாதிப்படையும் பிரபல சுற்றுலாத் தலங்கள்
இதன் தாக்கம் முதன்மை வீடுகளுக்கு மட்டுமல்ல, பல பிரபல சுற்றுலாத் தலங்களையும் பாதிக்கிறது. அரசாங்க அறிக்கையில், 500 க்கும் மேற்பட்ட விடுமுறை அடுக்குமாடி குடியிருப்புகள், அவற்றில் பாதி ரிசார்ட் வீடுகள், உடனடி அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
#LE20H | L’objectif du Gouvernement : lutter contre le réchauffement climatique.
Cela passe aussi par l’adaptation de notre pays à ses effets. C’est le message que j’ai porté ce soir.
pic.twitter.com/IvkIF7Wbne— Christophe Béchu (@ChristopheBechu) April 4, 2024
கூட்டு குடியிருப்புகளில் குவிக்கப்பட்டுள்ள் இந்த சொத்துகள், மதிப்பீடு €167 மில்லியனை தாண்டியுள்ளது.
கடற்கரை சமூகங்கள் தீர்வு காண போராட்டம்
பிரான்ஸ் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட கம்யூன்கள் (communes) “உடனடி ஆபத்தில்” உள்ளவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தீர்வுகளை உருவாக்க உள்ளூர் அதிகாரிகள் போராடி வருகின்றனர். அமைச்சர் பெச்சு இந்த பிரச்சனையை குறைப்பதற்கான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கடற்கரை அரிப்பு பிரச்சனை சொத்து இழப்பை விட மிகப்பெரிய சவாலாக உள்ளது, இது சுற்றுலா வளத்தை நம்பியிருக்கும் பல கடற்கரை சமூகங்களின் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது.
Cerema நடத்திய ஆய்வுகள்
2028, 2050 மற்றும் 2100 ஆகிய ஆண்டுகளுக்கான கணிப்புகளை செரேமா (Cerema) உருவாக்கியுள்ளது.
அதன்படி சுமார் 900 கி.மீட்டர் கடற்கரை பகுதி அரிப்புக்கு ஆளாக கூடும் அபாயம் இருப்பதை கண்டறிந்துள்ளன.