;
Athirady Tamil News

மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனை விரைவில் இயங்குவதற்கான சாத்தியம் : வடக்கு ஆளுநர் உறுதி

0

மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனை விரையில் இயங்குவதற்கான சாத்தியப்பாடு கிடைத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ளஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நேற்று (06.04.2024) புதுக்குடியிருப்பில் மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற புதுவை பண்பாட்டு பெருவிழா எனும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரை
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த ஆண்டில் இரண்டு தடவைகள் இந்த மாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இந்த ஆண்டு முடிவிற்குள் மாவட்டத்தின் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான நிலக்கண்ணிகள் முழுமையாக அகற்றப்படவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதற்காக 31 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

சென்றவாரம் அதற்கான கூட்டம் நடத்தியுள்ளோம் அரசாங்க அதிபர்களினால் தெரிவிக்கப்பட்ட பயனாளிகளுக்கு தலா 4 மில்லியன் பெறுமதியான 31 ஆயிரம் வீடுகள் வடக்கில் அமைத்து தரப்படும், மலசல கூட வசதிகளுடன் வீட்டிற்கூரைக்கு மேல் சூரிய சக்தி பொருத்தப்படாமல் உங்கள் காணிகள் அமைத்து கொடுக்கப்படும்.

மாங்குளம் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு வைத்தியசாலையினை செயற்படுத்த முடியாத நிலைஇருந்தது அதற்கான ஆளணி சிக்கல் இருந்தது அதனை பெற்றுக்கொள்வதற்கு பலமுறை முயன்றும் இப்போது இருக்கின்ற நிதிப்பற்றாக்குறையால் அதனை செய்வதற்கு தயங்கி இருந்தார்கள்.

எனினும் நாங்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதி அவரின் செயலாளருக்கு விடுத்த விசேட பணிப்புரையின் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதற்கான ஆளணி முழுமையாக அனுமதிக்கப்பட்டு தற்போது அந்த வைத்தியசாலை முழுமையாக திறந்துவைப்பதற்கான சாத்தியப்பாடு எங்களுக்கு கிடைத்துள்ளது.

அத்துடன் நெருக்கடியான பொருளாதரத்திற்கு மத்தியில் இந்த மாகாணத்திற்கான விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது ”என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.