இஸ்ரேல் போரின் 6 மாத பூர்த்தி: போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் பிரித்தானியா
காசாவில் குழந்தைகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டுவர வேண்டுமென பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், காசாவில் கடல்சார் உதவி வழித்தடத்தை அமைப்பதற்கான ஆதரவையும் பிரித்தானிய உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை, இஸ்ரேலின் வரலாற்றில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யூதா்கள் மிக மோசமான இழப்பைச் சந்தித்த மிக பயங்கரமான தாக்குதல் என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கண்டனம்
இந்நிலையில், இஸ்ரேல் போரினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதுடன் தற்போது, காசாவில் 32,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.
மேலும், இஸ்ரேலின் இந்த படையெடுப்பிற்கு உலக நாடுகள் பலவும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்க்கது.