3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டு உதவித்தொகை அறிவித்த பிரித்தானிய பல்கலைக்கழகம்
இந்தியா உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டுகள் உதவித்தொகையை பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் பொறியியல் முதுகலை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்குவதாக உள்ளூர் ஸ்ட்ராத்திகல்ட் பல்கலைக்கழகம் (University of Strathclyde) அறிவித்துள்ளது.
மலேசியா மற்றும் தாய்லாந்து மாணவர்களுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
பொறியியல் பிரிவில் ஓராண்டு முதுகலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்தியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் மற்றும் மே 3-ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த முயற்சி, British Council மற்றும் GREAT Britain Campaign-உடன் இணைந்து, சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.