ஈரானை எதிர்கொள்ள நாங்கள் தயார்: அமெரிக்கா பதிலடி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் அல்லது அமெரிக்காவின் தூதரகங்கள் கட்டிடங்களை ஈரான் தாக்கலாமென கருதும் அமெரிக்கா அதனை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது இஸ்ரேல் கடந்தவாரம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் பதில்தாக்குதலை மேற்கொள்ளுமென அமெரிக்கா கருதுகின்றது.
இந்நிலையில் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றோமென அமெரிக்க அதிகாரியொருவர் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஈரான் தாக்குதல்
எதிர்வரும் நாட்களில் ஈரான் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.
இதேவேளை ஈரான் தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க அதிபர் இஸ்ரேலிய பிரதமருடன் தொலைபேசி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எங்கள் குழுக்கள் தொடர்ந்து இந்த விடயம் குறித்து ஆராய்ந்துவருகின்றன மற்றும் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை பாதுகாப்பதற்கு இஸ்ரேலிற்கு உள்ள உரிமையை நாங்கள் ஆதரிக்கின்றோமென அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.