அறிவாலயம் ஆளுமை விருத்தியக ஏற்பாட்டில் தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கிய சுடர் இராமலிங்கம் பங்கேற்க சிந்தனை அரங்கம்
அறிவாலயம் ஆளுமை விருத்தியக ஏற்பாட்டில் தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கிய சுடர் இராமலிங்கம் பங்கேற்க சிந்தனை அரங்கம் 06.04.2024 சனிக்கிழமை மாலை செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
விவசாய அமைச்சின் உத்தியோகத்தர் நடராஜா ஐங்கரனின் முன்னிலைப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஆசியுரை வழங்கினார்
தமிழி அமைப்பின் பெருந்தலைவர் நிகேதன் வரவேற்புரை ஆற்றினார்
நிகழ்வில் இளைஞர்களின் எதிர்காலத்தை ஆகச் சிறப்பாக செப்பனிடுவது எந்த சூழல் என்ற வகையில் வீட்டுச் சூழலே என தென்னாடு பத்திரிகை ஆசிரியர் ஜீவா சஜீவனும் கல்வி சூழலே என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கிளிநொச்சி அபிராமியும் நட்புச் சூழலே என பேராதனை பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் சாரங்கனும் சமுதாய சூழலே என தமிழ்நாடு தேவகோட்டை யோகேஸ்குமாரும் கருத்துரைத்தனர். இலக்கிய சுடர் இராமலிங்கம் நடுவராக செயற்பட்டார். இலக்கிய சுடரை கல்விக் காருண்யன் ஈ எஸ் பி நாகரத்தினமும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை சிரேஸ்ட விரிவுரையாளர் கு. பாலசண்முகனும் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவித்தனர்.
நிகழ்வில் நூற்றுக் கணக்கான இலக்கிய ஆர்வலர்கள் பங்கு பற்றினர்