வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து ; 9 பேரின் நிலை
இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.