பாதுகாப்பை பலப்படுத்தும் முனைப்பில் கனடிய அரசாங்கம்
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்பினை பலப்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஒர் கட்டமாக அவுகுஸ் (AUKUS) அமைப்பில் இணைந்து கொள்வது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
AUKUS அமைப்பு அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒர் கூட்டணியாகும்.
அணுசக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் நோக்கில் இந்த கூட்டணி நிறுவப்பட்டது.
முதல் கட்டத்தில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும்; அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே இணைந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த அமைப்பில் இணைந்து கொள்வதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கில் இவ்வாறு கூட்டணியில் இணைந்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.