இளவரசி கேட் மீது மேகனுக்கு பயங்கர பொறாமை: காரணம் இதுதான்
தன் கணவரான ஹரியுடன் இளவரசி கேட் பழகுவதைக் குறித்து மேகனுக்கு பொறாமை என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுனர் ஒருவர்.
ஒரு காலத்தில் எங்கு சென்றாலும், அண்ணன் வில்லியம், அண்ணி கேட் இல்லாமல் செல்லமாட்டார் இளவரசர் ஹரி. ராஜ குடும்ப மும்மூர்த்திகள் (Royal trio) என ஊடகங்கள் குறிப்பிடும் அளவுக்கு மூவரும் சேர்ந்தேதான் எங்கென்றாலும் செல்வார்கள்.
அப்படியிருந்த குடும்பத்தில், மேகன் நுழைந்தார். எல்லாமே தலைகீழாக மாறிப்போனது. ராஜ குடும்ப மரபுகள் தெரியாமல், ஒத்துப்போகவும் முடியாமல், உதவியாளர்களை மோசமாக நடத்தி, அடம்பிடித்து ராஜ குடும்பத்துக்கே பெரும் தலைவலியாகிப்போன மேகனால், மொத்த ராஜ குடும்பமும் மனவேதனை அனுபவித்தது.
கடைசியில், கணவனை குடும்பத்தை விட்டுப் பிரித்ததுமின்றி, பிரித்தானியாவை விட்டே அழைத்துச் சென்றுவிட்டார் மேகன்.
மனம் வருந்தும் ஹரி
தனக்கு உடன் பிறந்த ஒரு சகோதரி இல்லை என்ற குறையைத் தீர்த்துவைத்தவர் தன் அண்ணி கேட்தான் என்றே ஹரி கூறுவதுண்டு.
ஆனால், திருமணத்துக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன. ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்றதும், தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்து தங்கள் குடும்பத்துக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தினார்கள் ஹரி மேகன் தம்பதியர்.
இளவரசி கேட்டை மேகன் அவமதிக்க, ஹரியும் கூட தலையாட்டியதுடன், தன் பங்குக்கு, தனது ஸ்பேர் புத்தகத்தில் தன் அண்ணன் அண்ணியை மோசமாக விமர்சித்திருந்தார் ஹரி.
இந்நிலையில், தான் சகோதரியாக நினைத்திருந்த தன் அண்ணிக்கு புற்றுநோய் என தெரிந்ததும், அவரை அவமதித்துவிட்டோமே என மனதுக்குள் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறாராம் ஹரி. வில்லியமும் கேட்டும் ஹரி மேகன் தம்பதியரை பிரித்தானியாவுக்கு அழைக்க, ஹரிக்கு பிரித்தானியா செல்ல ஆசை என்றாலும், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் மேகன்.
மேகனுக்குப் பொறாமை
இதற்கிடையில், ஹரியின் அண்ணன் வில்லியமும் அண்ணி கேட்டும் இளவரர் இளவரசியாக ராஜ குடும்பத்தில் வலம் வர, தன் வாழ்க்கையை அவர்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து பயங்கர பொறாமையிலிருக்கிறார் மேகன், என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Ingrid Seward என்பவர்.
மேகன், தானும் ஒரு இளவரசியாக விண்ட்சர் மாளிகையில் வாழ்வேன் என்று எண்ணிக்கொண்டிருந்தார் என்பது குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கூறும் Ingrid Seward, ஆனால், வில்லியமும் கேட்டும் அந்த அழகான மாளிகையில் வாழ்ந்துகொண்டிருக்க, தாங்கள் நாட்டிங்காம் இல்லத்தில் வாழவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டதே அவருக்கு பொறாமைதான் என்கிறார்.