;
Athirady Tamil News

ரயிலில் விலையுயர்ந்த பொருளை தவறவிட்ட திருநெல்வேலிக்காரர்.., கடைசியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

0

திருநெல்வேலியைச் சேர்ந்த பயணி ஒருவர் ரயிலில் தவறவிட்ட விலையுயர்ந்த பொருளை தெற்கு ரயில்வே உதவியுடன் மீட்டுள்ளார்.

பொதுவாக ரயிலில் பலரும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்து செல்வதற்கு பயப்படுவார்கள். ஏனென்றால், பொருட்களை திருடிவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடுவார்கள்.

இந்நிலையில், பயணி ஒருவர் ரயிலில் தவற விட்ட iPad -யை உதவி எண் 139 வாயிலாக மீட்டு தெற்கு ரயில்வே ஒப்படைத்துள்ளது. இதற்கு, அந்த பயணி தெற்கு ரயில்வேக்கு நன்றி கடிதம் எழுதிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

என்ன நடந்தது?
தமிழக மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், ஏப்ரல் 1 -ம் திகதி எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பதியில் இருந்து மதுரைக்கு பயணம் செய்துள்ளார். இவர், மதுரை ரயில் நிலையத்தில் இறங்கும் போது தனது விலையுயர்ந்த ஐ-பேடை ரயிலிலேயே மறந்து வைத்துவிட்டார்.

இதனால், உடனடியாக ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொண்டு தனது ஐ-பேடை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

இதன்பின்னர், மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை காவல் அதிகாரிகள் ஐ-பேடை கண்டுபிடித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். பின்னர், இதுகுறித்து முத்துகிருஷ்னனுக்கு தகவல் தெரிவித்தவுடன், அவர் மானாமதுரைக்கு சென்று ஐ-பேடை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தை பாராட்டியும், மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தும் முத்துகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்த தெற்கு ரயில்வே, வாடிக்கையாளருடைய இந்த கருத்துக்களுடன் கூடிய கடிதம், எங்களை சிறப்பான சேவை செய்ய வைக்க உதவுகிறது என்று கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.