;
Athirady Tamil News

சாரதிகளை கைது செய்தால் பணப்பரிசு..! காவல்துறை அதிகாரிகளுக்கு வெளியான அறிவிப்பு

0

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் காவல்துறையினருக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து காவல்துறை பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்படும் உத்தியோகத்தர்களுக்கு நிதி ரீதியான சன்மானமே வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 ரூபா சன்மானம்
அதன்படி குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதி ஒருவரை கைது செய்யும் காவல்துறை உத்தியோகத்தருக்கு 5000 ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுபிடிப்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் இரத்த பரிசோதனை சாதனங்கள் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக 1500 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.