பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்களின் எச்சரிக்கை : எரிபொருள் விநியோகம் தடைப்படுமா..!
பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) பெட்ரோலிய விநியோகஸ்தர்களுக்கு மூன்று சதவீத தள்ளுபடியில் 18 சதவீத வற்(VAT) வரியை நடைமுறைப்படுத்தியுள்ளமை பெரும் சுமையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் , “இலாபமின்றி வற் செலுத்துவது நாடு முழுவதும் உள்ள 60 சதவீத எரிபொருள் நிரப்பும் மையங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்(CPC) எங்கள் கருத்துக்களை கேட்கத் தவறினால் நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம்.
பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்களின் எச்சரிக்கை : எரிபொருள் விநியோகம் தடைப்படுமா..! | Risk Fuel Supply Interruption Warning Starborder
இது தொடர்பில் CPC, Sinopac, IOC மற்றும் RM Parks (Private) Limited உட்பட அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம்.
இதன்படி கடந்த 11 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க முடிவு செய்தோம்.
தடையின்றி எரிபொருள்
ஆனால் ஒரு பொறுப்புள்ள சங்கமாக நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்காக ஏப்ரல் 20 ஆம் திகதி வரை தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்தோம்.
நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தால் நாடு முழுவதும் உள்ள 60 சதவீத எரிபொருள் நிரப்பும் மையங்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த விவகாரம் குறித்து அனைத்து உறுப்பினர்களையும் எச்சரிக்க எங்கள் சங்கம் முடிவு செய்துள்ளதுடன் வற் செலுத்த அவர்கள் தயாராக இருந்தபோதிலும் இந்த தள்ளுபடியில் வற் விதிக்கப்படுவது சட்டவிரோதமானது” என அவர் தெரிவித்துள்ளார்.