தமிழர் கிராமத்துக்குள் புகுந்த 8 அடி முதலை!
மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று(13) அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது.
இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலை மீட்பு
இம்முதலை கிராமத்திற்குள் உட்புகுந்ததையடுத்து கிராம மக்கள் பிடித்து முதலையை கட்டிப் போட்டிருந்தனர்.
அதேவேளை கந்தளாய் வனஜீவராசிகள் திணைகள அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் வழங்கியதையடுத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை அம் முதலையினை மீட்டு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.