கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மற்றுமொரு சொகுசு கப்பல்
கொஸ்டா டெலிசியோசா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இன்று (15) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த கப்பலில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவு நோக்கி
அவர்கள் காலி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலாவில் ஈடுபடுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டுக்கு சொந்தமான குறித்த கப்பல் இன்றிரவு மாலைதீவு நோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.