அதிபர் தேர்தலில் பணியாற்ற வாகன உரிமம் கேட்கும் எம்.பிக்கள்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வரிச்சலுகை வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியாத பட்சத்தில் குறைந்த பெறுமதியான வாகனத்திற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் மீண்டும் நாடாளுமன்ற அவைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
தேர்தலில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு
எதிர்வரும் தேர்தலில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாகனம் இல்லாதது பாரிய பிரச்சினை எனவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாகனங்கள் ஏதும் இல்லாத பல புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு எம்.பி.க்களுக்கு வாகன இறக்குமதி உரிமம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.