பிரதமரின் வருகையால் நடந்த விபரீதம் – பறிபோன 28 வயது இளைஞரின் உயிர்
பிரதமர் வருகையின் முன்னிட்டு பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி இளைஞர் ஒருவர் சிக்கி உயிர் இழந்துள்ளார்.
நாட்டின் பிரதமர் மோடி, நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். பிரதமரின் வருகை காரணமாக அந்தந்த இடங்களில் பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அப்படி, கேரளா மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டின் காரணமாக இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி, நேற்று கேரளா சென்றிருந்தார். பிரதமரின் வருகையை அடுத்து பாதுகாப்பின் காரணமாக சாலைகளில் நடுவில் போலீசார் கயிற்றை கட்டி வைத்துள்ளனர்.
இதனை சரியாக கவனிக்காத மனோஜ் உன்னி(28) என்ற இளைஞர் வாகனத்தில் அவ்வழியாக சென்ற போது, கயிற்றில் சிக்கி உயிர் இழந்துள்ளார். இது தொடர்பாகன் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இச்சம்பவம், கடந்த ஞாயிறு இரவு அன்று நடந்துள்ளது. எர்ணாகுளம் வளஞ்சாம்பலம் ஜங்ஷன் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சியில் இளைஞர் வண்டியில் வந்தபோது அருகே 3 இளைஞர்கள் இருப்பதும் பதிவாகியுள்ளது.
இது குறித்து விளக்கமளித்த கமிஷனர் ஷியாம் சுந்தர், கயிற்றிற்கு முன்பாக 3 போலீசார் நிறுத்தப்பட்ட போதிலும் வேகமாக அந்த இளைஞர் வண்டி ஓட்டியதன் காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததுள்ளதாக தெரிவித்துள்ளார்.