ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடு எது தெரியுமா…!
ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடாக தற்போது பாகிஸ்தான் மாறியுள்ளது.
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அதனை வாங்க முடியாமல் அந்த நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
அதிகரிக்கும் பணவீக்கம்
இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த ஆண்டுக்கான பணவீக்கம் 25 வீதமாக அதிகரிக்குமென கடன் மதிப்பீட்டு நிறுவனமான மெனிலா தெரிவித்துள்ளது.
அத்துடன், பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது.
இதனால், தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழலில் பாகிஸ்தான் உள்ளது.
நெருக்கடியை எதிர்நோக்கும் பாகிஸ்தான்
இந்த நிலையில், கடன் மதிப்பீட்டு நிறுவனமான மெனிலா, பாகிஸ்தானின் பணவீக்கம் தொடர்பான மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 25 வீதமாக இருக்கும் எனவும் வளர்ச்சி 1.9 வீதமாக இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கத்தை 21 வீதத்துக்குள் கொண்டு வர பாகிஸ்தான் இலக்கு வைத்திருந்தது. எனினும், அந்த இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.