;
Athirady Tamil News

ஈரானின் அணுமின் நிலையங்களை இலக்கு வைக்கும் இஸ்ரேல்: அச்சத்தில் ஐ.நா

0

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலாக ஈரானின் அணுமின் நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பாளர்கள் அஞ்சுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்ற இஸ்ரேலின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, ஈரானை தாக்குவதற்கு “சரியான நேரத்திற்காக காத்திருப்போம்” என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்புக் குழு அச்சம் தெரிவித்தது.

சிறிய நாடாக இருந்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இருக்கும் இஸ்ரேல், அதி நவீன ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்களைக் கொண்டுள்ளது.

ஈரானின் அணுமின் நிலையங்கள்
இஸ்ரேலிய இராணுவத்திடம் சுமார் 400 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த போர்க்கப்பல் பொருத்தப்பட்ட ஏவுகணைகள் மூலம் ஈரானின் அணுமின் நிலையங்களை இஸ்ரேல் தாக்கினால், ஈரானால் தாக்குதலை தடுக்க முடியாது என்றும், அணு வெடிப்புகள் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அணுமின் நிலையங்களைத் தாக்குவதன் மூலம், இஸ்ரேல் உடனடியாக ஈரானைச் சிதைக்க முடியும் என்றும் அணுசக்தி கண்காணிப்பாளர்கள் விளக்குகின்றார்கள்.

ஈரான் கடந்த 13ஆம் திகதி ஏவுகணை மற்றும் ஆட்களில்லாத விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இது சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலால் அழித்ததற்கும் ஈரானியப் புரட்சிப் படையின் இரு தலைவர்களின் மரணத்துக்கும் பதிலடியாக இருந்தது.

இஸ்ரேல் பதில் அளிக்கும்
ஈரானில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து வந்த ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை இஸ்ரேலிய இராணுவம் தாக்கி அழித்தது. இது அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலிருந்து மட்டுமல்ல, ஜோர்தானிலிருந்தும் ஆதரவைப் பெற்றது.

அதன்படி, ஈரான் தாக்குதலால் இஸ்ரேலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஈரான் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய போர் அமைச்சரவை கூடி ஈரானுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தது. இதன்போது, ஈரானுக்கு சரியான நேரத்தில் இஸ்ரேல் பதில் அளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை நிபந்தனையின்றி ஆதரிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஈரானுடனான மோதலை தவிர்க்குமாறு இஸ்ரேலை கேட்டுக் கொண்டன.

எனினும், எதிரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.