யாழில். விஷ பூச்சி கடிக்குள்ளானவர் உயிரிழப்பு
காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார்
கடந்த 14ஆம் திகதி இவருக்கு காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி ஒன்று கடித்துள்ளது. அதனை அடுத்து அவர் அதுக்கு பார்வை பார்த்துள்ளார்.
இருந்தும் வலி தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.