உக்ரைன் – ரஷ்ய போர்! 50 ஆயிரம் இராணுவத்தினர் பலி
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரில், இதுவரை 50 ஆயிரம் ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் ரஷ்ய இராணுவத்தினரின் இறப்பு வீதம் பாரியளவில் அதிகரித்துள்ளாாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 12 மாதங்களில் உயிரிழந்த ரஷ்ய இராணுவத்தினரின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகரிக்கும் இறப்பு
இரண்டு நாடுகளுக்கு இடையிலான போரில் உயிரிழக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய, கடந்த ஆண்டில் 27, 300 ரஷ்யா இராணுவத்தினர் போரில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விடயம் தொடர்பில் ரஷ்யா இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.
கணக்கிடப்படாத மரணங்கள்
இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கிடையிலான போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 50, 000 ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கணக்கிடப்படாத மரணங்கள் தொடர்பில் ஆராய்ந்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.