உக்ரைனில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று காலை (17-04-2024) இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் உக்ரைனின் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 11 ஏவுகணைகளில் ஏழு ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது.
மேலும், தாக்குதல் நடத்த ஏவுகணை இல்லாததால் தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.