யாழில் கசிப்பு பொதியிடலில் ஈடுபட்டிருந்த பெண் கைது
யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனைக்காக அவற்றை சிறு சிறு பொதிகளாக பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை பொலிஸார் சுற்றி வளைத்த போது , வீட்டினுள் விற்பனைக்காக கசிப்பினை சிறு சிறு பொதிகளாக பொதி செய்து கொண்டிருந்த பெண்ணை கைது செய்துள்ளனர்
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பெண்ணையே கைது செய்துள்ளதாகவும் , பெண்ணிடம் இருந்து சுமார் 10 லீட்டர் கசிப்பினை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.