தவக்கால 40 நாட்கள் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்த பெண்!
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து அப்பஎண் காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அதில்,
அந்த அனுபவம் அற்புதமாக இருந்தது. உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளை அனுபவித்தேன். இந்த ‘மோமோ டயட்’ தனது நீண்ட கால உணவு பழக்கத்தோடு ஒத்துப்போகிறது என்று விளக்கி உள்ளார்.
அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
அதேசமயம் பழங்களை மட்டுமே சாப்பிடுவதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.