மத வழிபாட்டிற்கு பிரித்தானிய பாடசாலை ஒன்றில் தடை விதிப்பு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பிரித்தானிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த முறைப்பாட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாடசாலை மாணவர் ஒருவர், தொழுகை செய்ய தடை விதிப்பது பாரபட்சமானது என்று கூறி உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
முறையீடு நிராகரிப்பு
வழக்கு விசாரணையின் போது பாடசாலையில் தொழுகை செய்ய அனுமதிப்பது மாணவர்கள் மத்தியில் மதவேறுப்பாட்டை ஏற்படுத்தும் என பாடசாலை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடுத்த மாணவர், பாடசாலையில் இணையும்போதே, தனது மத சம்பந்தமான அடையாளங்களை வெளிப்படுத்தமாட்டேன் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் என குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி தாமஸ் லிண்டன் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியே நிராகரித்துள்ளார்.