உலகின் சிறந்த விமான நிலையங்கள்: முதல் இடத்தை இழந்த சிங்கப்பூர்
உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம்(Hamad International Airport) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்(Singapore Changi Airport) அந்த அந்தஸ்தை இழந்து தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) நேற்று முன் தினம் (17) ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில்(Frankfurt) நடந்த நிகழ்ச்சியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையம்
இதில் தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் முதல் இடத்திலும் மற்றும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
தென் கொரியாவின் சியோல் இஞ்சியோன் விமான நிலையம்(Incheon International Airport) மூன்றாவது இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம்(Haneda Airport) நான்காவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி இரண்டாவது இடத்தில் வந்தாலும் ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதுடன் சாங்கி விமான நிலையம் உலகிலேயே சிறந்த குடிநுழைவுச் சேவைகளை வழங்கும் விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த விமான நிலைய விருது
உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக விளங்கும் சாங்கி விமான நிலையமானது உயரமான பகுதியில் அமைந்துள்ள விமான நிலையமாவதோடு நீச்சல் குளத்துடன் ஓய்வு விடுதிகள் மற்றும் திரையரங்கம் என பல வசதிகளைக் கொண்டுள்ளது.
அத்தோடு லாஸா விடுதி இங்கு உள்ளதுடன் 1981 இல் தொடங்கப்பட்ட இந்த விமான நிலையத்தை சிங்கப்பூர் அரசு நிர்வகித்து வருவதுடன் இங்கு மூன்று முனையங்கள் உள்ளன.
இதனுடன் சாங்கி விமான நிலையம் 2023 இல் சிறந்த விமான நிலைய விருதை வென்றதுடன் முதல் பட்டியலில் நான்கு இந்திய விமான நிலையங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன.
டெல்லி விமான நிலையம் பட்டியலில் 36 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் மும்பை விமான நிலையம் 95 ஆவது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 59 ஆவது இடத்திலும் மற்றும் ஹைதராபாத் விமான நிலையம் 61 ஆவது இடத்திற்க்கும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையங்கள் பின்வருமாறு:
- தோஹா – ஹமாத் விமான நிலையம்
- சிங்கப்பூர் – சாங்கி விமான நிலையம்
- சியோல் – இன்சியான் விமான நிலையம்
- டோக்கியோ – ஹனேடா விமான நிலையம்
- டோக்கியோ – நரிடா விமான நிலையம்
- பாரிஸ் – சார்லஸ் டி கோல் விமான நிலையம்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – துபாய் விமான நிலையம்
- ஜெர்மனி – முனிச் விமான நிலையம்
- ஸ்விட்சர்லாந்து – சூரிச் விமான நிலையம்
- துருக்கி – இஸ்தான்புல் விமான நிலையம்
- ஹாங்காங்
- ரோம் ஃபியூமிசினோ
- வியன்னா
- ஹெல்சின்கி-வான்டா
- மாட்ரிட் – பராஜாஸ்
- சென்ட்ரேர் நகோயா
- வான்கூவர்
- கன்சாய்
- மெல்போர்ன்
- கோபன்ஹேகன்