உலக சாதனை படைத்த இலங்கை தமிழ்ச் சிறுவன்
நுவரெலியா – லவ்வர்ஸ் லீஃப் பகுதியை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
குறித்த சிறுவன் தமக்கு காண்பிக்கப்பட்ட சகல உடல் உறுப்புக்களின் பெயர்களையும் சரியாக கூறியதுடன் அதிக உடல் உறுப்புக்களின் பெயர்களைக் கூறி, இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த கலைநேசன் ஹர்சித் என்ற சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.
சிறுவனின் சாதனை
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா ஆகியோர் அந்த சிறுவனின் சாதனையை உறுதி செய்து அவருக்கான சான்றிதழை வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமாரின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன் அவர் அந்த சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சிறுவனின் சாதனையை பாராட்டி பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.