ரபா நகர் மீது இஸ்ரேல் குண்டுமழை : குழந்தைகள் உட்பட பலர் பலி
காஸாவின் தென் பகுதியிலுள்ள நகரான ராஃபா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் ஆறு குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்று முன்தினம்(19) இடம்பெற்றுள்ளது.
பெரும் பாதிப்பு
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ராஃபாவின் புறநகர்ப் பகுதியான தெல் சுல்தான் பகுதியில் குடியிருப்புக் கட்டடத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டதாக காஸா மக்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்த விமான குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த ஆறு குழந்தைகள், இரு பெண்கள் மற்றும் ஓர் ஆண் ஆகியோரின் உடல்கள் ராஃபாவின் அபு யூசுப் அல்நஜார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் மற்றும் பெண்கள்
அத்தோடு இடம்பெயர்ந்தவர்கள் இருந்த குடியிருப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தாக்கப்படவர்கள் அணைவரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தவிர போராளிகள் இல்லென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எகிப்து நாட்டின் எல்லையையொட்டியுள்ள ராஃபா நகரில் போரால் பாதிக்கப்பட்ட காஸாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்து வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.