;
Athirady Tamil News

மாலைதீவு : இந்தியாவை பின்தள்ளி முதலிடம் பிடித்தது சீனா

0

மாலைதீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அந்நாட்னெ் அதிபராக பதவியேற்ற முகமது முர்சு இந்தியாவிற்கு எதிரான கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன் சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறார்.

இந்த அரசியல் நெருக்கடியால் இந்தியாவில் இருந்து மாலைதீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது.

மாலைதீவின் சுற்றுலா அமைச்சகம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த மாதாந்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தரவு காட்டுகிறது.

குறைவடைந்த இந்தியா சுற்றுலா பயணிகள்
ஜனவரி மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் 56,208 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலைதீவுகளுக்குச் சென்றுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி-மார்ச் 2024 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 34,847 ஆகக் குறைந்துள்ளது. இது 2023ஆம் ஆண்டை விட 38 சதவீதம் சரிவாகும்.

அதிகரித்த சுற்றுலா பயணிகள்
இதற்கிடையில், ஜனவரி-மார்ச் 2023-ல் சீனாவில் இருந்து 17,691 சுற்றுலாப் பயணிகள் மாலைதீவுகளுக்குச் சென்றுள்ளனர். ஜனவரி-மார்ச் 2024-ல் எண்ணிக்கை 67,399 ஆக உயர்ந்தது. இது 281 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்தது.

சமீபத்திய தரவுகளின்படி, மாலைதீவு சுற்றுலாவின் முதல் 10 சந்தைகளில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் சீனா 11 சதவீத பங்கைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.