யாழில் தனியார் பேருந்து நடத்துனர் மீது கத்திக்குத்து தாக்குதல்
யாழ்ப்பாணத்தில்(Jaffna) இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து நேற்று இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டம்
இந்நிலையில், இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் நேற்று (20) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த போராட்டம் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.