ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக நிலவும் கடும் பதற்ற நிலை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்றையதினம் (21-04-2024) நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.
இதனையத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அங்கு பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.